மகிழ்ச்சி முதல் மரணம் வரை: நடிகை பார்வதியின் அசத்தல் ஒரு வரி பதில்கள்!

 கற்றல் மீதான ஈடுபாடுதான் என்னை அடையாளப்படுத்தும் அம்சம். எனக்கு எல்லாவற்றின் மீதும் எல்லைகளற்ற ஆர்வம் இருக்கிறது எனும் நடிகை பார்வதி உடன் ஒரு சுவாரசிய பேட்டி:

1.   உங்கள் பார்வையில் 'மகிழ்ச்சி' எத்தகையது?
மாசற்ற மனசாட்சியுடன் ஒரு நல்லிரவு உறக்கத்துக்கும் சீசா விளையாட்டு (ஏற்றஇறக்க பலகை விளையாட்டு) போல் ஏற்ற இறக்கங்களை சரிசமமாக பாவிக்கும் தன்மைக்கும் இடையேயான போட்டாபோட்டிதான் மகிழ்ச்சி.

2.   உங்களை பெரிதும் அச்சுறுத்துவது எது?
லட்சியப் பாதைகளில் குறுக்கிடும் சமரச முயற்சிகள்.

3.   உங்களை கவர்ந்த நல்லொழுக்கம்?
மன்னிப்பு.

4.   உங்களை அடையாளப்படுத்தும் முதன்மை அம்சம் எது?
எனக்கு எல்லாவற்றின் மீதும் எல்லைகளற்ற ஆர்வம் இருக்கிறது. ஆர்வமிகுதி அல்லது கற்றல் மீதான ஈடுபாடுதான் என்னை அடையாளப்படுத்தும் அம்சம். பல்வேறு விஷயங்களையும் ஆழப் படித்து புரிதலை மேம்படுத்திக் கொள்ள
விரும்புகிறேன்.

5.   உங்கள் குறை என எதை குறிப்பிடுவீர்கள்?
காலம்தாழ்த்துதல்.

6.   உங்கள் அதிகம் பொறுத்துக்கொள்ள முடிந்த பிழை எது?
தெளிவான படிப்பினையை நோக்கி மேற்கொள்ளும் முயற்சியில் விளையும் பிழைகள்.

7.   நீங்கள் மிகவும் வெறுப்பது..
இந்த புவியை படுகொலை செய்வதில் கவனமாக, நேர்த்தியாக ஒருவொருக்கொருவர் உதவி செய்துகொள்கிறோமே அதுதான் என்னை மிகுந்த வெறுப்புக்குள்ளாக்குகிறது. வேதனை பொருந்திய நகைப்பை ஏற்படுத்துகிறது.


8.   உங்கள் துரதிர்ஷ்டமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?
என்னால் சக ஜீவனிடம் அன்பு செலுத்தமுடியாமல் போவதை. அலட்சியமாக நடந்து கொள்வது நான் மரணிப்பதற்கு நிகரானது.

9.   எதை நீங்கள் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறீர்கள்?
எனது கலை.

10.  உங்கள் மனம் கவர் வண்ணம்?
இப்போதைக்கு அடர் இண்டிகோ ப்ளூ.

11.  நீங்கள் நீங்களாக இல்லாவிட்டால் யாராக இருப்பீர்கள்?
என்னைவிட ஆகச்சிறந்த 'நான்' ஆக இருப்பேன். என் சுயம் அல்லாது வேறு யாராக இருக்க நான் விரும்புவதைவிட துன்பியல் நிலை வேறு ஏதும் இருக்காது.

12.  உங்களுக்கு பிரியமான கவிஞர்கள்?
வில்லியம் ப்ளேக், ஜான் கீட்ஸ், நாரியா வாஹீத்... இன்னும் சிலரும்.

13.  நீங்கள் ரசிக்கும் ராணுவ நடவடிக்கை எது?
தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மதம் மற்றும் கலாச்சாரத்தின் பிடியில் இருந்து மக்களை விட்டு விடுதலையாக்க நடத்தப்படும் ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையுமே என் மனம் கவர்ந்ததுதான். அதேவேளையில் அத்தகைய முயறிசியில் மனித உயிர்கள் மடியும்போது ஆழ்ந்த வருத்தம் ஏற்படாமலில்லை.

14.  நீங்கள் ரசிக்கும் சீர்திருத்தம்?
ஒரு மனிதன தனது தவறுகளை தானே நளினமாக திருத்திருக்கொள்ளும் சீர்திருத்தமே தலைசிறந்தது. சர்வதேச அளவில் அண்மைக்காலங்களில் என்னைக் கவர்ந்த அரசியல் சீர்திருத்தம் தன்பாலின உறவுக்கும், திருமணத்துக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

15.  என்னிடம் இல்லையே என உங்களை ஏங்க வைக்கும் ஒரு திறமை?
ஓவியக் கலை.

16.  உலக வரலாறுகளில் உங்கள் தூற்றுதலை அதிகம் பெற்ற ஒரு கதாபாத்திரம்?
அப்படி எதுவும் இல்லை.

17.  உங்களுக்கு பிடித்த உணவு, பானம்?
சாம்பார் சாதம், அப்பளம், அத்துடன் மாங்காய் ஊறுகாய். பிடித்தமான பானம் எலுமிச்சை சாறு.

18.  உங்களது தற்போதைய மனநிலை என்ன?
கனியும் நிலையில் இருக்கும் காய் போன்றது.

19.  உங்களது மரணம் எப்படி இருக்க வேண்டும்?
உண்மையில் எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லை. படுகொலையாக இருக்காமல் இருந்தால் போதுமானது.

20.  உங்களுக்கு நெருக்கமான பொன்மொழி?
'பிடிவாதமான மகிழ்ச்சி' (Stubborn gladness) இந்த வார்த்தையை எலிசபத் கில்பர்ட் தனது ‘A Brief for Defence’ கவிதையில் பயன்படுத்தியிருக்கிறார். அந்தக் கவிதையில் ஒரு வரி இப்படித்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது, "இரக்கமற்ற உலையாக திகழும் இவ்வுலகில் நமக்கான மகிழ்ச்சியை சிக்கென பற்றிக்கொள்ளும் பிடிவாதம் நமக்கு வேண்டும்"

பார்வதி தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை. சார்லி, என்னு நிண்டே மொய்தீன் அவரது அண்மைக்கால படங்கள் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றி கண்டன. கடந்த ஆண்டு இந்த இரண்டு படங்களுக்காகவுமே அவர் கேரள அரசின் சிறந்து விருதினைப் பெற்றார்.Share on Google Plus

About Murasu Cinema

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment