2.0 , விஜய்-60, தல-57

கபாலி பீவர் எப்படியோ அமைதியாகிவிட்டது. இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் 2.0 படத்தில் பிஸியாகிவிட்டார், விஜய் பரதன் இயக்கத்திலும், அஜித் சிவா இயக்கத்திலும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் இப்படங்களின் கதை இது தான் என்று Exclusive-ஆக சில விஷயங்களை கூறியுள்ளனர்.
இதில் 2.0 படத்தில் அக்‌ஷய் குமார் வேற்று கிரகவாசி, அவர் பூமிக்கு வரும் போது ஏற்படும் சில மாற்றம் அவரை மிருக குணம் கொண்டவராக மாற்றுகின்றது, இதனால், பல நாச வேலைகளை அவர் செய்ய, வசீகரன் மீண்டும் சிட்டியை உருவாக்கி அக்‌ஷய் குமாரை கொல்வதே படத்தின் கதையாம்.


விஜய்-60 கிட்டத்தட்ட எங்கள் வீட்டு பிள்ளை ரீமேக் என்றே கூறலாமாம், இரண்டு விஜய் ஒருவர் வீரமானவர் மற்றொருவர் பயந்த சுபாவம் கொண்டவர், பயந்த சுபாவம் கொண்டவர் இடத்தில் வீரமான விஜய் சென்று செய்யும் அதிரடிகளே படத்தின் கதை என கூறியுள்ளனர்.



தல-57 இன்னும் படப்பிடிப்பு கூட தொடங்கவில்லை ஆனால், இதில் அஜித் இண்டர்நேஷ்னல் போலிஸ் ஆபிஸர் என்பது மட்டும் உறுதி, இந்திய ராணுவ ரகசியங்களை வெளியே கூறும் சில தீவிரவாதிகளை தேடி அழிப்பதே அஜித்தின் வேலை என அதில் குறிப்பிட்டுள்ளனர்.



Share on Google Plus

About Murasu Cinema

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment